சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் கட்டனூர் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கண்மாய் புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கட்டனூர் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, கண்மாயைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், (24.10.2026)அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நீர்த்தேக்க திறனை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.முக்கியமாக பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்டனூர் கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டனூர் அணைக்கட்டின் பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கட்டனூர் கண்மாயில் கரை 6200 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகள்,வரத்துக்கால்வாய் 5400 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள்,கட்டனூர் அணைக்கட்டு மேம்படுத்தும் பணிகள், 7 மடைகள் மறுகட்டுமான பணிகள், கலுங்கு சீரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.2.86 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் மூலம் 177 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு,1335 ஹெக்டேர் (3300 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.
மேலும், கண்மாயின் முழுகொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, கட்டனூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பூர்த்தியடைந்து, இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
மேலும், கண்மாயில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளைத் தரமாகவும், திட்டமிட்ட காலத்திற்குள்ளும் முடிப்பதற்குத் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்மாய்க்கு மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமிக்கும் வகையில் நீர்வரத்துப் பாதைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
0
Leave a Reply