தென் தமிழகத்தின் ஐடி வளர்ச்சியில் புதிய மைல்கல்: நெல்லைக்கு 6-வது இடம்!
2025-26 நிதியாண்டுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) மற்றும் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (STPI) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், திருநெல்வேலி ரூ.385.31 கோடி மதிப்பிலான ஐடி ஏற்றுமதியுடன் தமிழகத்தில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
14 ஐடி நிறுவனங்கள்; 4,099 பேருக்கு வேலைவாய்ப்பு
திருநெல்வேலியில் தற்போது 14 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் 4,099 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, SEZ மூலம் ரூ.40 கோடியும், STPI மூலம் ரூ.345.31 கோடியும் பதிவாகியுள்ளன. மேலும், திருநெல்வேலியில் ரூ.1.03 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, தென் தமிழகத்தின் வளர்ந்து வரும் முக்கிய ஐடி மையங்களில் ஒன்றாகத் திருநெல்வேலி உருவெடுத்து வருகிறது. இது அப்பகுதியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply