தேசிய விளையாட்டுபோட்டிகள்
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம்
தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நேற்று பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது.
பாரிஸ் ஒலிம்பிக் 4X400 5., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வித்யா 26, , 58.11 வினாடி நேரத்தில் ஓடிவந்து, தங்கப்பதக்கம் வென்றார்.
.மற்றொரு தமிழக வீராங்கனை ஸ்ரீவர்தானி (59.86) , மகா ராஷ்டிராவின் நேஹா (1:00.52) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
உயரம் தாண்டுதல்
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,) தங்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா,1.79 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபிநயா (1.77 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல்
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ,உ.பி.,வீரர் சச்சின் யாதவ், 84.39 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உ.பி., வீரர்கள் ரோகித் யாதவ் (86.23 மீ.,), விகாஷ் சர்மா (79.33 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம்
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் சவான் பார் வல் (13 நிமிடம், 45.93 வினாடி) தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
0
Leave a Reply