தான்வி சர்மா உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்
இந்தியாவின் தான்வி சர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,ஜப்பானின் சகி மட்சுமோடோ மோதினர். தான்வி 13-15, 15-9, 15-10 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் தான்வி.தவிர இவர், 17 ஆண்டுகளுக்கு பின் இத் தொடரில் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனையாகிறார். இந்தியாவின் செய்னா நேவல் கடைசியாக 2008ல் புனேயில் நடந்த தொடரில் தங்கம் வென்றிருந்தார்.
0
Leave a Reply