ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்டதொடரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.
நேற்று இரண்டு பிரிவுகளாக ,ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்கள் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்," என்றார்.காம்பிர் "உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவோம் என்றார்.
0
Leave a Reply