உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர்.
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அமெரிக்காவின் ஆலிஸ் வாங் மோதினார். இதில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் தான்வி 15-12, 15-7 என, இந்தோனேஷியாவின் வினார்டோவை மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ஸ்ரீ 11-15, 15-5, 15-8 கணக்கில் சிங்கப்பூரின் ஆலியா ஜகாரியாவை வென்றார்.
0
Leave a Reply