அனிஷ் பன்வாலா ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் .
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், , 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,ஆண்களுக்கான தனிநபர் 25 மீ இந்தியாவின் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அனிஷ் 35 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ், 15 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். சீனாவின் சு லியான்போபான் (36 புள்ளி) தங்கம் வென்றார்.
இது வரை 9 தங்கம் உட்பட 23 பதக்கம் சீனியர் பிரிவில் வென்ற இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 27 பதக்கம்) .
0
Leave a Reply