25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ், சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் .

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடாயில்லா ரேபியர் தறிகளாக (Rapier Shuttleless looms) தரம் உயர்த்த மூலதன மானியங்கள் விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது.

  இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டு தோறும் 3000 விசைத்தறிகளை நவீனமாக்கும் பொருட்டு ரூ.30.00/- கோடி நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட ரூ.15.00/- கோடியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.5.00/- கோடி என மொத்தம் ரூ.50.00/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட சிறப்பம்சங்கள் அடிப்படையில் விசைத்தறிகளை கொள்முதல் செய்திடலாம்.

 வழக்கமான விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடா இல்லா ரேபியர் தறிகளாகத் (Shuttleless Rapier Looms) தரம் உயர்த்துவதற்கு (With Tuck in device) 50% மூலதன மானியம் அல்லது ரூ.1.00/- இலட்சம் (ஒரு தறிக்கு With Tuck in device) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 10 தறிகள்)

புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் அல்லது ரூ.1.50/- இலட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை. (ஒரு பயனாளிக்கு அதிக பட்சம் 5 தறிகள்)

பொது வசதி மையம் அமைத்திட (Common Facility Centre - Warping and Sizing unit, Testing Lab, Design Studio and Sample Production centre) 25% மூலதன மானியம் அல்லது ரூ.60.00/- இலட்சம் (இதில் எது குறைவோ அத்தொகை)

மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

மேலும், கூடுதல் விபரங்களுக்கு அறை எண்.513, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்-626002 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கைத்தறித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News