குர்பிரீத் சிங் ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தி யாவின் குர்பிரீத் 572.18 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அமன்பிரீத் சிங் (572.11 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தைவென்றார்.
ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் குர்பிரீத் சிங் (572.18), அமன்பிரீத் சிங் (572.11), ஹர்ஷ் குப்தா (565.13) அடங்கிய இந்திய அணி, 1709.42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.
தனிநபர் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். சூரஜ் சர்மா (571.12 புள்ளி), தனிஷ்க் நாயுடு (568.11), முகேஷ் (564.16) அடங்கிய இந்திய அணி, 1703.39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.
50 மீ., 'ரைபிள் புரோன்' ஜூனியர் ஆண்கள்அணிகளுக்கான பிரிவில் சமி உல்லா கான் (617.0), அட்ரியன் கர் மாகர் (614.5),குஷாக்ரா சிங் ரஜாவத் (612.8) அடங்கிய இந்திய அணி, 1844.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்தியாவுக்கு இதுவரைஇத்தொடரில் 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என, 82 பதக்கம் கிடைத்துள்ளது.
0
Leave a Reply