இந்திய பெண்கள் தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் நான்காவது வெற்றி!
17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பூடானில், 7வது சீசன் ,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள்பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.
முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. நேற்று இரண்டாவது கட்ட போட்டி, இந்திய அணி, மீண்டும் பூடானை எதிர் கொண்டது.
முடிவில் இந்திய அணி 5-0 என தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா 12 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது .
0
Leave a Reply