சிப்ட் கவுர் சம்ராஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் .
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது கஜகஸ்தானில், 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா (589), ஆஷி சவுக்சே (586), அஞ்சும் மவுத்கில் (578) கூட்டணி, மொத்தம் 1753 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். 8 பேர் . பங்கேற்ற தனிநபர் பைனலில் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார்.
ஜூனியர் அணிகள் பிரிவில் 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் இந்தியாவின் பிராச்சி (588), மஹித் (587), அனுஷ்கா (583) கூட்டணி தங்கம் (1758 புள்ளி) வென்றது. தனி நபர் பிரிவில் இந்தியாவின் அனுஷ்கா, 460.7 புள்ளியுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீரர் ஆண்களுக்கான 'டிராப்' ஜூனியர் பைனலில் ஆர்யா வன்ஷ், கஜகஸ்தானின் நிகிடா, சமபுள்ளி (40) பெற்று முதலிடம் பெற்றனர். 'ஷூட் ஆப்பில்' ஆர்யாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்தியாவின் சபீரா, டிராப்' ஜூனியர் பெண்களுக்கான பைனலில் ,39 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார்.இந்திய வீராங்கனை ஆத்யா (38) வெள்ளி வென்றார். 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் - ஜூனியர் பிரிவில் இந்திய வீரர்சமீர் (21) வெண்கலம் வென்றார்.
0
Leave a Reply