கோவை, கொடிசியா மைதானத்தில்தேசிய ‘பைக் ரேஸ்'
நேஷனல் சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்,எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் 'எம்.ஆர்.எப்., ரேசிங், காட் ஸ்பீடு' சார்பில், , 2025க்கான இரண்டாம் சுற்று, பைக் ரேஸ், கோவை, கொடிசியா மைதானத்தில் நடந்தது. 'டர்ட் ரேஸ்' எனப்படும் இந்த பந்தயத்தில், ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 65 வீரர்கள், ஏழு வீராங்கனைகள், ஆறு சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
'மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி', 10 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் என, எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.வீரர்கள் மண் மேடுகளை தாண்டி விண்ணில் 'பறந்து' சாகசம் புரிந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும், ஒன்பது சுற்றுகள் வீதம் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வை யாளர்களை பரவசப்படுத் தியது.
'முதல் சுற்று புனேவிலும், இரண்டாம் சுற்று கோவையிலும் முடிந்த நிலையில், அடுத்த சுற்றுப் போட்டி குஜராத்தில் நடத் தப்படும். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்தடுத்து, ஆறு சுற்றுகள் நடத்தப் பட்டு, புள்ளிகள் அடிப்படையில் தேசிய சாம்பியன் அறிவிக்கப்படுவார்' என கூறினர்.
0
Leave a Reply