தான்விகன்னா ஸ்குவாஷ் தொடரில் 2வது இடம்
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் ‘நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்விகன்னா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை எதிர்கொண்டார்.
'இதன் முதல் செட்டை 3-11 என இழந்த தான்வி, 2 வதுசெட்டை 11-5 என கைப்பற்றினார். மூன்றாவது செட் 5-11,. நான்காவது செட்டில் போராடிய போதும், 10-12 என பறிபோனது. போட்டியின் முடிவில் தான்வி, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.எகிப்து வீரர்கள் முகமது கோஹர், யாசின் ஷோடி ஆண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர். யாசின் 3-0 என (11-5, 11-7, 11-3) நேர் செட்டில் வென்று சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply