பெண்களுக்கான ஆசிய கால்பந்து இந்தியா வெற்றி .
ஆசிய கோப்பை பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. மொத்தம் 33 அணிகள்& பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன.இந்தியபெண்கள்அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தா னுடன் இடம் பெற்றுள்ளது.
இதில், இந்தியா - இந்தோனேஷியா மோதிய முதல் போட்டி 'டிரா' (0-0) ஆனது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க் மெனிஸ்தானை சந்தித்தது.
முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (4) முதல் இடத்துக்கு முன்னேறியது. கடைசி போட்டியில் (ஆக. 10) மியான்மரை சந்திக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.
0
Leave a Reply