கால்பந்து 'பிபா' உலக கோப்பை 21வது சீசன்.
உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் அமெரிக்காவில், ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த பைனலில் இங்கிலாந்தின் செல்சி, பிரான்சின் பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. செல்சி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணி சார்பில் பால்மர் 2 (22, 30வது நிமிடம்), ஜோவோ பெட்ரோ (43வது) ஒரு கோல் அடித்தனர். செல்சி அணி 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் 2021-ல் கோப்பை வென்றிருந்தது.
0
Leave a Reply