டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஏ.டி.பி., வெளியிட்ட தரவரிசை ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடம்.
ஏ.டி.பி., டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். லண்டனில் நடந்த விம்பிள்டன் பைனலில் அசத்திமுதல் கோப்பை வென்றார்.
இத்தொடரில் பைனல் வரை சென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்,2வது இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 4வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச், 6வது இடத்தில் தொடர்கிறார்.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்தின் இகாஸ்வியா டெக்,4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். விம்பிள்டன் பைனலில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply