கிரிக்கெட் லார்ட்சில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன்எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன் எடுத்தது.பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 58/4 ரன் எடுத்திருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வெற்றிக்கு இன்னும் 135 ரன் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் இருந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜடேஜா(61) அவுட்டாகாமல் இருந்தார்.லார்ட்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 2,1 என முன்னிலை பெற்றது.நான்காவது டெஸ்ட் வரும் ஜூலை 23ல் மான் செஸ்டரில் துவங்குகிறது.
0
Leave a Reply