லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில், மூன்றாவது கிரிக்கெட் போட்டி
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங் சில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால்(0), கருண்(14), சுப்மன்(6) ஏமாற்றினார். 4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 58/4 ரன் எடுத்திருந்தது. ராகுல் (33) அவுட்டாகாமல் இருந்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் ஆனார், இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் நேற்று 4 விக்கெட் சாய்த்தார்.
5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் ,இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி ,முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவரில் 167/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 168/5 ரன் எடுத்து,5 விக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 3-2 என, கோப்பை வென்றது.
0
Leave a Reply