டென்னிஸ் சாம்பியன் விருதுடன் ஸ்வியாடெக் .
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' போலந்தின் இகா ஸ்வியாடெக் 24, 'நம்பர்-12' அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 23, மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 6-0 என வென்றார்.மொத்தம் 57 நிமிடம் நீடித்த பைனலில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்மு றையாக கோப்பை வென்றார்.இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வெற்றி பெற்ற 2வது வீராங்கனையானார் ஸ்வியாடெக். 'ஓபன் எரா'வில் இப்படி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஸ்வியாடெக் ஸ்வியாடெக், ரூ.35 கோடி, 2வது இடம் பிடித்த அனிசிமோவா, ரூ.17 கோடி பரிசு பெற் றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்வியாடெக்கிடம்(போலந்து) தோற்ற அனிசிமோவா(அமெரிக்கா) கோப்பையை கோட்டைவிட்ட. இந்த சோகத்தில் அழுத அனிசிமோவா கூறுகையில்,"எனது வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்தவர் அம்மா. பைனலை காண புளோரிடாவில் இருந்து லண்டன் வந்த அம்மாவுக்கு நன்றி. தோல்விக்காக ரசிகர்களிடம் 'சாரி' கேட்கிறேன்," என்றார்.
0
Leave a Reply