சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில், கலப்பு இரட்டையர் தொடரின் ,'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி, நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கியது. முதல் செட்டை 8-11 என இந்திய ஜோடி இழந்து,அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றியது. தொடர்ந்து 3வது செட்டை 11-6 என இந்திய ஜோடி, 4வது செட்டையும் 11-7 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியா டெக், ரஷ்யாவின் சாம்சோனோவா மோதினர். ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 , , 2வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றி, விம்பிள்டனில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட் ரீவா மோதினர். இரண்டு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் பென்சிக் 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு போலந்தின் ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பென்சிக் முன்னேறினர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ,முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.பர்மிங்காம் போன்று லார்ட்சிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர் .. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில், இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.. முந்தைய போட்டியில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதால், அவரும் கடும் பயிற்சி மேற்கொண்டனர்
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் 96-வது அகில இந்திய ஹாக்கி , சென்னை எம்.சி.சி. -முருகப்பா தங்கக்கோப்பைக்கான போட்டி நாளை (வியா ழக்கிழமை) தொடங்குகிறது. 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி , முதல் முறையாக. வெளிநாட்டு அணி ஒன்று பங்கேற்கின்றது. அணிகள் இருபிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், என்.சி.ஓ.இ. (போபால்) மராட்டியம், தமிழ்நாடு அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஆயில், மலேசியா ஜூனியர், இந்திய கடற்படை, கர்நாடகா மத்திய நேரடி வரிகள் வாரியம் (டெல்லி) அணியும் இடம் பிடித்துள்ளன . ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அணிகள் அரைஇறுதிக்கு முன் னேற ,லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்க வேண்டும். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மராட்டியம்-தமிழ்நாடு (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் ஆட்டத்தில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகள் சந்திக்கின்றன .இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் பரிசாக அளிக்கப்படும்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ,.ரோகித், கோலி, அஷ்வின் என பல 'சீனியர்கள்' ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்..எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் பர்மிங்ஹாமில், எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார். . பர்மிங்ஹாம் டெஸ்டில் விக்கெட் சாய்த்த 10 ஆகாஷ் தீப், பீஹாரின் சசாரமில் உள்ள டெஹரி கிராமத்தை சேர்ந்தவர். தாய், சகோதரி தந்த ஊக்கத்தில், கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆகாஷ் தீப் கிரிக்கெட் கனவை தொடர்ந்தார் சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார்.
காமன் வெல்த் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் மொரிசியசில் முதன் முறையாக நடந்தது. பெண்களுக்கான பைனலில் (8 பந்து பிரிவு) இந்தி யாவின் வித்யா பிள்ளை, தென் ஆப்ரிக்காவின் மரினா ஜேக்கப்ஸ் மோதி னர் . துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட வித்யா,5-1 என முன்னிலை பெற்றார். இதன் பின் போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் அவுட்' நடந்தது. இதில் வித்யா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் சித்ரா மகிமைராஜ், சிங்கப் பூரின் வீனஸ் லிம் ஜின்யி மற்றொரு பைனலில் (10 பந்து) மோதினர். இப்போட்டி 5-5 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் அவுட்டில்' சித்ரா 2-4 என தோல்வியடைந்து, வெள்ளி வென்றார். பெண்களுக்கான 6 பந்து பிரிவில் இந்தியாவின் அனுபமா, கீர்த்தனா அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலம் பெற்றனர்.ஆண்களுக்கான ஸ்னுாக்கர் காலிறுதியில் இந்தியாவின் அனுபவ வீரர் பங்கஜ் அத்வானி, 2-3 என தோல்வியடைந்தார்.
ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்ததுகிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் மொத்தம் 5 தொடர் இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ், 14 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகம்) முறையில் போட்டி நடந்தது. இதில் கார்ல்சன் 12.5 புள்ளியுடன் முதலிடம் பெற் றார். அமெரிக்காவின் வெஸ்லே (12), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (12) அடுத்த இரு இடம் பெற்றனர். 18 சுற்றில் 4 வெற்றி, 3 'டிரா' செய்த குகேஷ் (5.5), 11ல் தோற்றதால் கடைசி இடம் (10) பிடித்தார்.ரேபிட், பிளிட்ஸ் என ஒட்டு மொத்தமாக கார்ல்சன் 22.5 புள்ளியுடன் சாம்பியன் ஆனார்.வெஸ்லே (20) 2வது இடம் பெற்றார். குகேஷிற்கு (19.5) மூன்றாவது கிடைத்தது. பிரக் ஞானந்தா (15) 9வது இடம் பெற்றார்.செஸ் பெண்கள் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் , 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா நேரடியாக இத்தொடரில் 'நாக் அவுட்' முறையிலான இரண்டாவது சுற்றில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பத்மினி, சீனாவின் லான்லின் ஜங்கை சந்தித்தார். பத்மினி, 56 வது நகர்த்தலில் முதல் போட்டியில் வென்றார். தொடர்ந்து 2வது போட்டியில் சாதித்த பத்மனி 2.0-0 என வென்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆசிய பாரா வில்வித்தை சீனாவின் பீஜிங் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன் ஷிப் நடந்தது. ஆண்களுக்கான ரிகர்வ் ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், தாய்லாந்தின் நெட்சிரி மோதினர். ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றிருந்த, ஹர்விந்தர் 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய 3வது தங்கம். இத்தொடரில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண் கலம் என, 9 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
கஜகஸ்தானில், உலக கோப்பை குத்துச்சண்டை கஜகஸ்தானில், 2வது சுற்றில் பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் சாக்க்ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸ் மோதினர். இரண்டு முறை யூத் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாக்ஷி, 5-0 என்ற கணக்கில் தங்கம்வென்றார். இத் தொடரில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக்ஷி.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 427/6 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (180 ரன்) சேர்த்து இங்கிலாந்துக்கு 608 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடர் 1-1என சமநிலையை எட்டியது. கடந்த 58 ஆண்டுகளில் இங்கு ஏற்கனவே பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் சுப்மன் கில், வரலாற்றுசிறப்புமிக்கவெற்றியைத்தேடித்தந்துள்ளார். பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல் வெற்றி.ஆகாஷ் தீப், இரு இன்னிங்சி லும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில், சிறந்த பந்துவீச்சை (10/187) பதிவு செய்தார். இந்திய அணி, அன்னிய மண்ணில் தனது'மெகா' வெற்றியை (336 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன் 2016ல் நார்த் சவுண்டில் நடந்த வெஸ்ட் இண்டீ சுக்கு எதிரான டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இது, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 4வது சிறந்த வெற்றியானது. மூன்றாவது டெஸ்ட் வரும் ஜூலை 10ல் லார்ட்சில் துவங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற திருப்பூர் அணி .என்.பி.ஆர்., கல்லுாரிதிண்டுக்கல், நத்தம் மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., பைனலில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது. திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன் எடுத்து தோல்வியடைந்தது.