சுரைக்காய் அல்வா!
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்- 1
சர்க்கரை -500 கிராம்
நெய் - 200 கிராம்
ஏலக்காய் பொடி,
முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சுரைக்காயை சுத்தம் செய்து தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக்கி அரைக்கவும். வாணலியில் சர்க்கரையை, தண்ணீரில் கலந்து பாகு காய்ச்சவும். அதில் அரைத்த சுரைக்காயை சேர்க்கவும். நன்றாகவெந்ததும், நெய் சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.சுவை மிக்க, 'சுரைக்காய் அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
0
Leave a Reply