பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் .
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில். 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ. 6 கோடி.'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
இத்தொடரின் 'நாக் அவுட்' முறையிலான இரண்டாவது சுற்று தற்போது நடக்கிறது. இந்தியாவின் ஹரிகா, சகவீராங்கனை நந்திதாவை எதிர்கொண்டார். இருவரும் மோதிய முதல் போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார் நந்திதா. இப்போட்டி 37வது நகர்த் தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹரிகா 1.5–0.5 என வெற்றி பெற்றார்.
இந்தியாவின் வைஷாலி, கனடாவின் மெய்லி மற்றொரு போட்டியில் மோதினர்.இதில் இரு போட்டியிலும் வெற்றி பெற்ற வைஷாலி (2.0-0) மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய இளம் வீராங்கனை திவ்யா, 1.5–0.5 என ஜார் ஜியாவின் கெசரியாவை சாய்த்தார்.
இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஹம்பி, உஸ்பெகிஸ்தானின் அப்ரு ஜாவை 1.5-0.5 என வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply