லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் ,முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 251/4 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா - பந்தில் பவுண்டரி அடித்த ரூட், சதம் கடந்தார். பும்ரா 'வேகத்தில்' ஸ்டோக்ஸ் (44) போல்டானார். தனது 21வது ஓவரை வீசிய பும்ரா, முதல் பந்தில் ரூட்டை (104) போல்டாக்கினார். அடுத்த பந்தில் வோக்சை, 'டக்' அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 271/7 என திணறியது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்
0
Leave a Reply