விம்பிள்டன் டென்னிஸ் முதன்முறையாக பைனலுக்குள் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினார்கள்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 12வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இரண்டு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 என வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்..
மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர்.இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 பெற்று விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply