பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளம்..
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளத்தின் 7வது சீசன் பெங்களூருவில், நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப் 12-எப்64' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 72.25 மீ., எறிந்த ஹரியானாவின் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்40-எப்41' பிரிவு பைனலில் ஹரியானாவின் நவ்தீப் சிங் (42.63 மீ,), பிரின்ஸ் (31.90 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப்46' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் சுந்தர் சிங் குஜ் ஜார் (64.53 மீ.,) தங்கப் பதக்கத்தை பற்றினார்.
'டி35, டி37, டி42' பிரிவு பைனலில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், உ.பி.,யின் பிரீத்தி பால் (15 வினாடி )முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த இருஇடங்களை குஜராத்தின் பினா (17.20 வினாடி), ஹரியானாவின் அவானி (20.40 வினாடி) கைப்பற்றினர்.பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் 'டி12, டி13' பிரிவு பைனலில் உ.பி.,யின் சிம்ரன் (12.30 வினாடி) தங்கம் வென்றார்.
' எப் 55, எப்56' பிரிவுஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் தமிழகத்தின் முத்துராஜா தங்கம் வென்றார். ஹரியானாவின் யோகேஷ் கதுனியா, ராமன் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
0
Leave a Reply