அர்ஜுனா விருது: துளசிமதி மகிழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டுக் கான 'கேல் ரத்னா' விரு துக்கு குகேஷ் (செஸ்), மனு பாகர் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் ('பாரா' உயரம் தாண்டுதல்) என நான்கு பேர் தேர்வாகினர். அர்ஜுனா விருதுக்கு, பாரிஸ் பாராலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற தமிழகத்தின் துளசிமதி (வெள்ளி), மணிஷா, நித்ய ஸ்ரீ (வெண்கலம்), ஆசிய விளையாட்டில் கைப்பற்றிய தமிழக ஸ்குவாஷ் வீரர் அபே சிங் உள்பட 32 பேர் தேர்வாகினர்.
0
Leave a Reply