25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி  மற்றும்  மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர்  சார்ந்தவர்களுக்கு,  ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை  மற்றும் பறக்கும்  தொழில் நுட்ப   பயிற்சி  (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார்   சோதனை  பயிற்சி  (Embedded Sensor Testing Program), பிரிண்டெட்  சர்க்யூட்போர்டு  வடிவமைப்பு  பயிற்சி  (PCB Designing Program), பொறியியல்  பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) அளிக்கப்படவுள்ளது .

                   தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,  ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல்  பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற   பயிற்சிகள்  அளிக்கப்பட உள்ளது.

 இதற்கான  தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி  (Drone Manufacturing Assembly Test& Flying ) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு  ஏதெனும் ஒரு  பட்டப்படிப்பு  முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும்  இருத்தல் வேண்டும்.

            எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program) மற்றும் பொறியியல்  பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program) போன்ற  பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும்  ஒரு  இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma)தேர்ச்சி  பெற்றவராக  இருத்தல் வேண்டும்.

மேற் கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு  தாட்கோ  இணையதளத்தின்  மூலம் www.tahdco.comபதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

      மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *