மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி
தமிழகத்தின் காஞ்சி புரத்தை சேர்ந்தவர்,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 22. பிறக்கும் போது தசைநார் சிதைவு காரணமாக இட துகை பாதிக்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளியான தந்தை முருகேசன், மகள் துளசிமதியை விளையாட்டு அரங்கில் களமிறக்கினார்.
பாட்மின்டனில் கால் பதித்தார் துளசிமதி. 15 நாடுகளில் நடந்த தொட ரில் 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில்
வெள்ளிப்பதக்கம் வென்றார். மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துளசிமதி "சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.
டில்லியில் இந்திய ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் (ஜன.14-19) நடக்க உள்ளது. இதில் சிந்து, லக்சயா சென், சிராக்-சாத்விக் உட்பட 21 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply