ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது.
ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கினார். தொழில்முனைவோர் சங்கத் தலைவர் அர்ச்சிதா வரவேற்றார். இதில் 18 முதல் 36 வயதிற்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோர் 120 பேர் பங்கேற்று ஆடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பேக்கரி, கட்டடக்கலை, அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த விற்பனை புதிய வாய்ப்புகள் குறித்து கண்காட்சி நடத்தினர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் விஜய் ராஜா, சிவகணேஷ் செய்திருந்தனர். கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
0
Leave a Reply