யூத் பெண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி சாம்பியன்'
குஜராத் மாநிலம் வதோதராவில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது.யூத் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி, ஹரியானாவின்' சுஹானா சைனி மோதினர். ஹன்சினி 4-2 (1-11, 11-9, 13-11, 11-9, 10-12, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இளம் வயதில் (15) 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைஆனார்.
டென்னிஸ்: காலிறுதியில் மாயா ரேவதி .ஒற்றையர் பிரிவு இந்தி யாவின் 15 வயது வீராங் கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரான்சின் மனான் பேப்ளரை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-0 என வென்றார் ரேவதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர் 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரேவதி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply