விளையாட்டு போட்டிகள் 13 th OCTOBER 2025
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அசாமின்கவுகாத்தியில், (தனிநபர், இரட்டையர்) இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் இந்தியா சார்பில் அபிஷேக் பால் (1:04.17), 8 (1:11.23) முதலிடம் பிடித்தனர்.கென்யாவின் அலெக்ஸ் மடாடா (59.50 நிமிடம், ஆண்கள்), லிலியன் கசாய்ட் ரெங் கெருக் (1:07.20, பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றனர்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 'ஸ்கீட்' பிரிவில்ஏதென்சில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான், 16வது இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், 38வது இடம் பிடித்தார்.
ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில், பெண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் 8வது இடம் பிடித்த இந்தியா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது.
0
Leave a Reply