நீச்சல் போட்டியில் சென்னை, செங்கல்பட்டு முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டில் முன்னிலை.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.
சென்னை வேளச்சேரியில் நடந்து வரும்தொடரின் 11-வது நாளான நீச்சல்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் செங்கல்பட்டை சேர்ந்த கவீன்ராஜ் 16 நிமிடம் 54.97 வினாடிகளில் இலக்கைகடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். சென்னை வீரர் சாய் கணேஷ் வெள்ளிப்பதக்கமும், நெல்லை வீரர் லியோனர்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
100 மீட்டர் பட்டர்பிளையில் ரோகித்பெனிடிக்சன் (செங்கல்பட்டு), 100 மீட் டர் பிரீஸ்டைல் ஜாஷூவா தாமஸ் (சென்னை) நிதிக் நாதெல்லா (செங்கல்பட்டு), 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக்கில் சுதேஷ் குமார் (செங்கல்பட்டு), ஆகியோர் இதன் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ,தங்கப்பதக்கத்தை வென்றனர்.
0
Leave a Reply