பிரிட்ஜை சுத்தம் செய்ய....
ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதற்கு முன், அதை அணைத்துவிட்டு சிறிது நேரம் அப்படியே விடவும். அதன் வெப்பநிலை அறை வெப்பநிலைக்கு மாற வேண்டும்.
ஃபிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைக்கவும். பின், ஃபிரிட்ஜின் அடுக்குகள் அனைத்தையும் கழற்றவும். அவற்றை முதலில் சுத்தம் செய்திடவும். பலவிதக் கறைகள், அழுக்குகள் எனச் சேர்ந்திருக்கும் இவற்றை பாத்திரம் துலக்கும் சோப் கொண்டோ, எலுமிச்சை சாறு கொண்டோ நன்றாகக் கழுவவும்.
பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் உட்புறத்தில் நன்றாக உலர்ந்த பின் ஆன் செய்து, அடுக்குகள், டோர், டெம்ப்பரேச்சர் என அனைத்தையும் செட் செய்த பின், உணவுப் பொருள்களை உள்ளே எடுத்து வைக்கவும்.
வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும்.மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறைகொடுக்கவும்.
பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு, அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ, சுலபமாக எடுக்க வரும்.
0
Leave a Reply