25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”, திட்டம் முகாமானது 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 22.02.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. 21.02.2024 அன்று மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைக்களுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து எடுக்கப்படும். மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.
இரண்டாம் நாள் (22.2.2024) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள உள்ளாட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News