25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"தி கார்டன் ஆஃப் டைம்" டிரஸ் தயாரிக்க 10,000 மணிநேரம் Met gala

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷாஅம்பானி மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடைஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.உலகிலேயே மிகப்பெரிய பேஷன் நிகழ்வாக கருதப்படுகிறது மெட்காலா.இதில் உலகெங்கிலும் இருக்கக்கூடிய பல்வேறு பிரபலங்கள் புது விதமான ஆடைகளை அணிந்து வந்து கலக்குவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருளாக வைக்கப்பட்டது "ஸ்லீப்பிங் பியூட்டி அவேக்கனின் ஃபேஷன்" என்பதாகும்

இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த அந்த ஃப்ளோரல் கவுன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த கவுனை வடிவமைத்தவர் ராகுல் மிஸ்ரா ஆவார். இதனை வடிவமைக்க அவரும் அவரது உதவியாளர்களும்10,000 மணி நேரங்களை எடுத்துக் கொண்டார்களாம். ஃப்ளோரல் புடவையை அடிப்படையாகக் கொண்ட இந்த கவுன், இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் கைப்பட எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தான் அது அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மெட்ரோபாலிடியன் மியூசியத்தை சென்றடைந்ததாம்.

இங்கு தான் மெட் காலா நிகழ்ச்சி கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈஷா அம்பானி அணிந்திருந்த ஆடையின் கருப்பொருள்"தி கார்டன் ஆஃப் டைம்"என்பதாகும். பலவகையான மலர்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் டிராகன் ஈக்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.ஃபரீசா (Fareesha), ஜர்தோசி( Zardozi), நாக்சி (Nakshi) , டப்கா(Dabka) மற்றும்(Frenchknots)பிரெஞ்சு நாட்ஸ் ஆகிய வகைகளைக் கொண்டு எம்ப்ராய்டரி இந்த ஆடை வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் அனைதா ஷெராஃப் தெரிவித்துள்ளார்.ஈஷா அம்பானி ஒரு பர்சையும் வைத்திருந்தார். இதுவும் பாரம்பரிய முறையில் இந்திய கிராமங்களில் தயாரிக்கப்பட்டதாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News