24 TH JULY விளையாட்டு போட்டிகள்
சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர்
சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர் சீனாவில், நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, உலகின் 'நம்பர்–6' ஜப்பானின் டோமோகா மியாசகி மோதினர். இதில் சிந்து 21-15, 8-21, 12-7 என வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 21-16 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் சிந்து, உன்னதி ஹூடா மோதுகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா, மிட்சஹாஷி ஜோடியை வென்றது.
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர்
பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3’ இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண் டிடேட்ஸ்' 'செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள், முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர். தற்போது அரையிறுதி நடக்கின்றன. உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி, ‘நம்பர்-3', சீனாவின் லெய் டிங்ஜீ மோதிய மற்றொரு அரையிறுதி 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.இன்று 'டை பிரேக்கர்' நடக்கிறது.
இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் போட்டியில் முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 3வது, கடைசி போட்டி செஸ்டர் லீ ஸ்டீரீட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்தியா, பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 318/5 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி, 49.5 ஓவரில் 305 ரன்னில் ஆல் அவுட்டானது. 13 ரன்னில் வென்ற இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. 14-20 தொடரை (3-2) வென்ற இந்தியா, 2 கோப்பையுடன் திரும்புகிறது.
0
Leave a Reply