25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


‘தொல்லியல் சிறப்புமிக்க சஞ்சீவி மலையில் அமையும் பல்லுயிர் பூங்கா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘தொல்லியல் சிறப்புமிக்க சஞ்சீவி மலையில் அமையும் பல்லுயிர் பூங்கா

ராஜபாளையம்: காலநிலைமாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பைதடுப்பதற்காக தமிழகத்தில் முதல்நகராக‘கார்பன் சமநிலைராஜபாளையம் திட்டம்’ தொடங்கப்பட்டுஉள்ளது. இதற்கான பிளானில்தொல்லியல் சிறப்பு வாய்ந்தசஞ்சீவி மலையில் பல்லுயிர்பூங்கா அமைக்கப்பட உள்ளது.ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக உள்ள சஞ்சீவி மலை கொத்தங்குளம் காப்புக்காடு என அழைக்கப்படுகிறது. சஞ்சீவி மலையில்252 வகையான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்துள்ளது. இந்த மலையில் சஞ்சீவிநாதர் கோயில் மற்றும் முருகன் கோயில் உள்ளது. இந்த மலை உச்சியில் உள்ள ராமர் பாறை என அழைக்கப்படும் தேன்தட்டுப்பாறையின் அடியில்3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளதுவெண்சாந்து கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்களில் பெருங்கற்கால குறியீடுகள் அதிகமாக உள்ளது. மேலும் இப்பாறையில் கோட்டுருவமாக வரையப்பட்ட விஷ்ணு உருவம் உள்ளது. இந்த ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் இயற்கைசீற்றங்கள் மற்றும் மனிதர்களால் சேதமடைந்து வருகிறது. இதனால் இந்த ஓவியங்களில் இருந்து முழுமையான தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. சஞ்சீவி மலையில் உள்ள பாறை ஓவியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடியபாதிப்பை தடுப்பதற்கானதிட்டத்தில் தமிழகத்தில்முதல் நகராக ராஜபாளையம் தேர்வு செய்யப்பட்டது.‘கார்பன் சமநிலை ராஜபாளையம்’திட்டத்தை அமைச்சர்கள்மெய்யநாதன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தனர். நீண்ட கால திட்டமிடலாக2041ம் ஆண்டிற்குள்கார்பன் வெளியீட்டைசமப்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்கள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் சஞ்சீவி மலை காப்பு காடுகளை பாதுகாத்தல்மற்றும் பசுமை பரப்பை அதிகரித்தல், சுற்றுசூழல் பூங்காக்கள் வடிவமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பசுமை எரிசக்தி முறைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி உள்ள சுற்றுசூழல் மண்டலத்திற்கானமேலாண்மை திட்டத்தைவனத்துறையுடன் இணைந்து உருவாக்கி செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News