விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி அறையில் (24.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணிகள் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 378 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள 288 வாக்குச்சாவடி மையங்களுக்கு 345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 374 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,
206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு 337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 365 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடி மையங்களுக்கு 324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 351 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply