25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அலர்ஜி பிரச்சனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அலர்ஜி பிரச்சனை

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். அலர்ஜி மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்சிலருக்கு மூச்சுமுட்டி திணறல் ஏற்படும். வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு ,போன்ற கோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள்.ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், உணர் குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம்தான். சிலருக்கு வெயில் மற்றும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்,கடுமையான வியர்க்குரு  வந்தாலும் அரிப்பு வரும்.

எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்.அலர்ஜி பிரச்சனை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கபடும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும்.எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.பசலைக் கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.புதினாவை வாரத்தில்3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளறிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News