அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு
இராஜபாளையம் நகரில் அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்த அறிவிப்பை கொடுத்தும், கண்காணிப்பின்றி குறையாத பழக்கத்தினால் நீர் வரத்து தடங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
ஆரம்பத்தில் இது குறித்து வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தவிர்க்குமாறும், உபயோகம் கண்டறிந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இவற்றையும் மீறிமார்க்கெட்,பூக்கடை,இறைச்சிகடைகள்,ஓட்டல்கள்,ரோட்டோரகையேந்திபவன்கள் என அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது .பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், சாக்கடைகளில் கொட்டப்படுகின்றன.
இவை மழைகாலங்களில் ரோட்டோர வடிகாலை விட்டு சாக்கடைநீர் நடை பாதைகளில் தேங்கி நிற்பதும், கொசு உற்பத்திக்கும் ஏதுவாக மாறி வருகிறது. கடைகளில் விவசாயிகளுக்கு ஆதாரமான கண்மாய்களில் மலையளவு குவிந்து கேட்பாரற்ற நிலைக்கு விவசாயிகளை தள்ளி விடுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டினை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து தடை செய்வதுடன் தொடர் அபராத நடவடிக்கைகளை பின் பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்..
0
Leave a Reply