காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
ஆயுதத்தால் வெல்ல முடியாததை அகிம்சையால் வென்றவர்.
அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.
குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும், மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக, கடைசி வரை அறவழி போராட்டத்தில், உறுதியாக இருந்து சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார். வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் ,விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. கொல்லாமை. துன்புறுத்தாமையை அடிப்படையாகக் கொண்ட அகிம்சை தத்துவத்தை பின்பற்றிய இவரது பிறந்த தினமான அக்., 2. ஐ.நா.. சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
0
Leave a Reply