25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


வாக்காளர் பட்டியலில் , ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022  முதல் தொடக்கம் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியலில் , ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் தொடக்கம் 

வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே  தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்  பெறுதல் அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல்  ஆகிய  நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது.

வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணினை https://www.nvsp.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ தங்களது வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்- 6B –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும்  தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர்  பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

 வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம்  கொண்டும் காட்சிப்படுத்தப்படாது, ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

                ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள்  கீழ்காணும் ஆவணங்களில் ஒன்றை அளிக்கலாம்.

1.               மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்ட அடையாள அட்டை

2.              வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய  கணக்கு புத்தகம்

3.              தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை

4.              ஓட்டுநர் உரிமம்

5.              பான் கார்டு

6.              தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்நிய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்டு அட்டை

7.              இந்திய கடவுச்சீட்டு

8.              புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணங்கள்

9.              மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட

                  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை              

10.            நாடாளுமன்ற,  சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டை

11.            இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன்  மேம்பாட்டு துறையால் வழங்கப்பட்ட தனித்துவ அடையாள அட்டை

                                

                       எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6B –ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து  தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  

திரு. ஜெ. மேகநாதரெட்டி I A S ,, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News