பேசுவது கலையா?
எத்தனையோ கலைகள் உள்ளன. பேசவதற்கு கூடவா கலை, வாய்க்கு ? வந்தபடியெல்லாம் பேசினால் நன்றாகவா இருக்கும். பேசுவது ரெம்ப சாதாரண விஷயம் என்று பலர் நினைக்கின்றனர். பேசுவதிலும் ஒரு கட்டுப்பாடு, பண்பாடு, கண்ணியம் வேண்டும். எப்படி ? நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதைப் புன்படுத்தாமல் பேசுவதுதான். யாராவது இதைப் பற்றி யோசித்திருக்கிறார்களா ?ஒரு கடைக்குப் போகிறோம். இது என்ன விலை ? என்று கேட்கிறோம். கடைக்காரர்கள் அதிலேயே விலை இருக்கு பாத்துக்கங்க. என்றால் எப்படி இருக்கும். அந்தக் கடைக்காரன் இருங்கம்மா பாத்துச் சொல்றேன். ஏன்று அமைதியாகச் பேசினால் உங்கள் மனம் குளிருமில்லையா ? எந்தப் பொருளைப் பற்றி நயமாக
எடுத்துக் கூறினால் நீங்களல் வாங்காமல் வருவீர்களா ? பண்பொழுக பேசும் பேச்சில் மயங்காதவர்கள் உண்டா ?மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை நடிகர் அவர்கள் கட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். எதிர் கட்சியாளர் அவ்வூரில் பிரபல டாக்டர். அவ்வூர் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதையும். அன்பும் வைத்திருந்தனர். இதை கேட்டவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டார்.இக்காலத்து தேர்தல் பிரச்சாரம் என்றால் காதை பொத்திக் கொண்டு ஓடும் அளவிற்கு பண்பற்ற வார்த்தைகள் வரும்.ஆனால் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோ, அந்த டாக்டரின் மருத்துவத்தை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். தனக்காக பிரச்சாரம் செய்ய வந்தவர் இப்படிப் பேசுகிறாரே ? என்று வெளிறிப் போனார். ஆனால் கலைவாணர் அவர்களோ இவ்வளவு பெரிய டாக்டரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால், உங்கள் ஊர் நல்லதொரு மருத்துவரை இழந்து விடும் என்று கண்ணியமாகப் பேசினார். அவர் பிரச்சாரத்தினால் கட்சி வெற்றி பெற்றது.
முன்னுக்கு வரும் ஒரு இசையமைப்பாளர் தான் இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் ஒரு தொகையைக் கேட்டார். உடனே அந்த தயாரிப்பாளரோ இப்பொழுது நம்பர் ஒன் இசையமைப்பாளருக்கு கொடுத்த செக் ஜெராக்சை காண்பித்து அவருக்கே இவ்வளவு தான் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கேட்பது நியாயமா ? என்றார். உடனே இளம் இசையமைப்பாளர் எனக்கு குரு, அனுபவம் மிக்க திறமைசாலி, நீங்கள் கொடுத்தது அவருக்கு சின்ன வேலை தான். ஆனால் நானோ முட்டாள். நான் கடுமையாக உழைக்க வேண்டும். என்று மூத்தவரை காயப்படுத்தாமல் தன் வேலையை சாதித்துக் கொண்டார்.ஒரு குழந்தை துறுதுறு என்று இருக்கிறது. அட எவ்வளவு அழகான குழந்தை உடம்பெல்லாம் மின்னுதே என்று சொல்லிவிடக் கூடாது. ஏதாவது குழந்தைக்கு வந்துவிட்டாள் 'சண்டாளன் வாயிலே பட்டே என் குழந்தைக்கு இப்படி வந்து விட்டது' என்பார்கள். அதைத் தவிர்த்து 'கடவுளுடைய ஆசிர்வாதத்தால் நீ நன்றாக இரு' என்று சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை.
இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இப்பொழுது தெரிகிறதா! என்ன இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம் என்கிறார்கள் பல சண்டை சச்சரவுகளை கண்ணியமான பேச்சினால் பேசித் தீர்த்துக்கலாம். இப்போ தெரியுதா பேசுவது கூட சுவை என்று. புதுவருடமான இன்றிலிருந்து கண்ணியமாக மற்றவரை புண்படுத்தாத பேசும் கலையை உயர்த்திக் கொள்ளுங்கள். என்னத்தால் கெட்டான் ? பேசியே கெட்டான் என்பர் பலர் .பேச்சையும் அளந்து அளவோடு பேசனும். சிலரை அன்பால் அரவணைத்து பேசி நம்முடைய காரியத்தை சாதிக்கலாம். ஆனால் சிலருக்கு அன்பாக பேசினால் கூட அலட்சியம் காண்பிப்பார்கள். அவர்களை எல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நயமாக கடிந்து பேச வேண்டும். அதைக் கூட அடாவடியாகப் பேசக் கூடாது. பேச நன்றாகக் கற்றுக் கொண்டுதான் பேச வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்று விட்டு எறிந்து பேசக் கூடாது ஆக பேசவது கலைதான்.
0
Leave a Reply