25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்

கமல் நடிப்பில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியை சந்தித்த இப்படத்தைக் கொண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாய் லோகேஷ் தற்பொழுது இப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.இப்படத்தில் லோகேஷ், ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைப்பதாக பேச்சும் எழுந்துள்ளது. தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாய் நடித்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 இப்படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பனுக்காக இப்படத்தில் கமல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தற்பொழுது இப்படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார்.அடுத்த1000 கோடி வசூலிக்க, புதிய யுத்தியை பயன்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி என்றால் இது இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து நிற்கும். மேலும் உலக அளவில் வசூலில் இதுதான் பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..அவ்வாறு இது மட்டும் நடந்து விட்டால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட படமாக இவை அமையும் எனவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் படைக்கும் லோகேஷ் கனகராஜின் மதிப்பும் உயர்ந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News