ராகி முறுக்கு (கேழ்வரகு முறுக்கு)
தேவையான பொருட்கள்:
ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 1 கப்,
அரிசி மாவு (இடியாப்ப மாவு) - 1/4கப்,
வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (அல்லது பொட்டுக்கடலை மாவு)- 1/4கப்,
வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
ஓமம் அல்லது சீரகம் - 1 தேக்கரண்டி,
எள் (கருப்பு அல்லது வெள்ளை) - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
செய்முறை:
ஒருபாத்திரத்தில் ராகிமாவு,அரிசிமாவு,வறுத்த உளுந்துமாவு,மிளகாய் தூள்,ஓமம்,எள்,உப்பு,மற்றும்வெண்ணெய் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்திற்கு(மென்மையாக) பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் (Star அச்சில்) பிசைந்த மாவை நிரப்பவும்.எண்ணெயைக் சூடாக்கி, மாவை அச்சைப் பயன்படுத்தி நேரடியாக எண்ணெயில் முறுக்காகப் பிழிந்து,மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
மொறுமொறுப்பான ராகி முறுக்கு தயார். ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் சேமிக்கலாம்.
ராகி மாவை சற்று வறுத்து பயன்படுத்துவது இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.வெண்ணெய் சேர்ப்பது முறுக்கை மிருதுவாக மாற்றும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டி.
0
Leave a Reply