25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  139 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  139 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(13.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள  130 பெண்களுக்கும் மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 குழந்தைகளுக்கும் என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்க்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்" உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தில் தற்போது வரை 19,217 பெண்கள் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.

இந்நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டுள்ள பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தையல் பயிற்சி பயின்ற 127 பெண்கள் மற்றும் உங்களுடன் எஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனு அளித்த 2 பெண்கள் என 129 பெண்களுக்கு தையல் இயந்திரம் ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பெண்களுக்கு ரூ.6,77,927/-மதிப்பீட்டின் கீழ் தையல் இயந்திரங்களையும்,கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் கீழ்    தையல் தொழில் துவங்கிட மாவட்ட தொழில் மையம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.50,000/- மானியத்தினையும்,முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் 5 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் புதிய வைப்புத் தொகை இரசீதுகளையும் (New Deposit Receipt), பயனடைந்து 18 வயது பூர்த்தியடைந்த 4 பயனாளிகளுக்கு  (Maturity Amount) ரூ.1,28,800/- மதிப்பிலானமுதிர்வு தொகைக்கான காசோலைகளை என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News