விளையாட்டு போட்டிகள் .21 st FEB 2026
ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்,பெங்களூருவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 6-3, 1-6, என, ஆஸ்திரேலியாவின் டெய்லா பிரஸ்டனை வென்றனர்.
முன்னாள் இந்திய வீரர்களான விஜேந்தர் சிங் (குத்துச் சண்டை), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) டில்லி மாரத்தான் ஓட்டத்தின் 11வது சீசன் நாளை கொடியசைத்து துவக்கிவைக்கின்றனர்.
இந்திய ஓபன் நடை போட்டி தொடர் சண்டிகரில் இன்று துவங்குகிறது. இதில் 21 கி.மீ., பாதி மாரத்தான், 42 கி.மீ., மாரத்தான் போட்டிகள் அறிமுகமாகின்றன . ஒலிம்பிக்கில் பாரிஸ் பங்கேற்ற இந்தியாவின் அக்ஷ்தீப் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட், சூரஜ் பன்வர், விகாஸ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப் சிங் ஜோடி ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் ,3-6, 4-6 என தென் கொரியாவின் ஜி சங் நாம், பின்லாந்தின் பாட்ரிக் நிக்லஸ் சால்மினன் ஜோடியிடம் தோல்வியடைந்தது
0
Leave a Reply