பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி11வது சீசனில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான ஜூனி யர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வென்ற இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இந்திய அணி அடுத்து நடந்த 9-16வது இடத்துக்கான போட்டியில், வேல்சை வென்றது.
இந்தியா, உருகுவே அணிகள் ,நேற்று நடந்த 9-12 வது இடத்துக்கான போட்டியில் மோதின. இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது.
இந்திய அணிக்கு மணிஷா (19வது நிமிடம்) கைகொடுத்தார். போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் கோல் அடித்தனர்.
0
Leave a Reply