பச்சை பட்டாணி நிறம் மாறாமல் இருக்க....
எந்த கிழங்கை வேக வைத்தாலும்10நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.
சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் நீங்கும்
ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும் தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.
பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
காய்கறிகள் சமைக்கும்போது பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply