சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கைக்கு 31.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச் சேர்க்கை 31.07.2025 முடிய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் நேரடிச்சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உரிய அசல் கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து இந்நேரடிச்சேர்க்கையில் மாணவ/மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இந்நிலையத்தில் தற்சமயம் சூரிய மின் சக்தி தொழில்நுட்பவியலாளர் (எலக்ட்ரிக்கல்) Solar Technician (Electrical), தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management),அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் (Advanced CNC Machining Technician), இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் ரூ டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் (Industrial Robotics & Digital ManufacturingTechnician), மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் (Manufacturing Process Control & Automation),ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/- ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி /கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் /பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-கூடுதல் உதவித்தொகை பெற்று வழங்கப்படும்.இந்நிலையத்தில் மாணவர்களுக்கான 3 வேளையும் உணவுடன் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது.
இவ்வாய்ப்பினை சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மற்றும் விருதுநகர் மாவட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய+1/+2/ பட்டய/பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற/ தோல்வியடைந்த/ இடைநின்ற மாணவ /மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற்கல்வியினை பயின்று தனியார்/மத்திய/ மாநில அரசு தொழிற் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினைவளாகத் தேர்வு மூலம் பெற்று பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சாத்தூர்: 04562-290953, 94990-55823 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply